20.9 C
Scarborough

முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!

Must read

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 57 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னிலும் சிராஜ் 0, பிரஷித் கிருஷ்ணா 0 எனவும் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article