இந்த வார தொடக்கத்தில் மார்க்கமில் பட்டப்பகலில் ஒரு நபர் தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வியாழக்கிழமை மாலை 5:20 மணியளவில் மெக்கோவன் வீதி மற்றும் 14வது அவென்யூ பகுதிக்கு துப்பாக்கிச் சூடு குறித்த முறைப்பாடு கிடைத்ததாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளை கையுறைகளையும் தலை முதல் கால் வரை இருண்ட ஆடைகளையும் அணிந்த ஒரு மெல்லிய ஆண் சந்தேக நபர் – பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தை நோக்கி கையில் துப்பாக்கியுடன் தெருவின் குறுக்கே வேகமாகச் செல்வதைக் காட்டும் கண்காணிப்பு காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சாம்பல் நிற ஹோண்டா CR-V வாகனம் ஓடு பாதையின் அருகில் வருவதையும் சந்தேக நபர் வாகனம் அருகில் வரும்போது, பாதிக்கப்பட்டவர் அதன் மீது பின்னோக்கிச் சென்று ஓட்டுநர் கதவில் மோதுவது உள்ளிட்ட காட்சிகளும் அதில் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர் பின்னர் பொலிஸை அழைத்ததாக காவல்த்துறையினர் தெரிவித்தனர். அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதோடு
இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட சம்பவம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தின் காணொளி அல்லது கூடுதல் தகவல்கள் உள்ள எவரும் தங்களை அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸை பெயர் குறிப்பிடாமல் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.