தெலுங்கு இயக்குநர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.
தெலுங்கில் முன்னணி இயக்குநர்களான வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.
இந்த இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல இலாபம் ஈட்டிக் கொடுத்தது. இதனால் பல்வேறு தெலுங்கு இயக்குநர்கள் தனுஷை அணுகி கதைகள் கூறிவந்தார்கள்.
அதில் வேணு உடுகுலா கூறிய கதையில் நடிக்க தனுஷ் தீர்மானித்துள்ளார். இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. தற்போதைய படங்களை முடித்துவிட்டு, இந்த படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார்.
வேணு உடுகுலா, ராணா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘விரடா பருவம்’ படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.