’96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சி . பிரேம்குமார். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மெய்யழகன் படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில், மலையாள சினிமாவின் ஜாம்பவான்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“மம்முட்டி , மோகன்லால் ஆகியோரது படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இருவருடனும் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம், கனவு.
தற்போதுள்ள பஹத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் போன்ற நட்சத்திரங்களையும் எனக்கு பிடிக்கும். விரைவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்றார்.