15.8 C
Scarborough

மனித உரிமைகள் மீறப்பட்டது; ரணிலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

Must read

இலங்கையில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் ஊடாக , அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜூலை 17, 2022 அன்று பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் தன்னிச்சையானது மற்றும் செல்லாதது என்று உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மையினர் தீர்ப்பளித்தனர்.

பெரும்பான்மை நீதிபதிகளான தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோடகொட ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

எனினும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதிபதி அர்ஜுன ஒபேசேகர தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின் அவசரகாலப் பிரகடனம் அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என்று கூறினார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

மனுதாரர்களின் சட்டக் கட்டணங்களை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article