ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வு நாளை (08) ஆரம்பமாக உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் இன்று காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குறித்த பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
இதேவேளை, குறித்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் அமைச்சர் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்த உள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார்.