ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’.
இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது .இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.
, “பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய ஈர்க்கக்கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் ‘மதராஸி’. கதையின் தன்மையையும் உணர்வுகளையும் அழகாக இணைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். காதல் பாதையும், குற்றவாளி பாதையும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. அதில் அருமையாகவும் நடித்துள்ளார். ஆக்ஷன் நாயகனாகவும் ஆச்சரியப்படுத்துகிறார்.
அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு வலுச்சேர்த்துள்ளது. வித்யூத் ஜாம்வாலின் ஸ்டைலான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் போன்றோரின் பாராட்டுக்கள் தமிழ் திரையுலகில் மிக பெரிய கௌரவமாக கருதப்படுகின்றது.
இந்த படத்தின் வசூல் விபரங்கள் எதிர்வரும் திங்கற்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.