பதிமூன்றாவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது.
இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 28 வது லீக் போட்டி நவிமும்பையில் இடம்பெறுகிறது.
இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி சற்றே தாமதமாகியது. நாணய சுழட்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 12.2 ஓவர்கள் முடிவில் 39 ஓட்டங்களை பெற்று 2 விக்கட்டுக்களை இழந்த நிலையில் மீண்டும் மழை பெய்த காரணத்தினால் போட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

