16.5 C
Scarborough

போலி காசோலைகளை பயன்படுத்தி $10 பெறுமதியுடைய சொத்துகள் திருட்டு!

Must read

போலி வங்கிக் காசோலைகளை (fake bank drafts) பயன்படுத்தி $10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய சொத்துகளை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரி பொலிசாரின் 3 விசாரணைகளில், உயர்தர பாண்டூன் படகுகள், கட்டிட உபகரணங்கள், வாகனங்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் 45 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஸ்பிரிங்‌வாட்டரிலுள்ள ஃபர்ஷித் அயான் (Farshid Ayon) (32) மற்றும் டொரோண்டோவை சேர்ந்த ஒலிவியா ஒஸ்போர்ன் (Olivia Osborne) (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது திருட்டு, மோசடி, ஆவணப் போலி, அடையாளத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கிங்ஸ்டனைச் (Kingston) சேர்ந்த ராண்டி ஸ்வெயின் (Randy Swain) $42,000 இழந்தார்; லாங்காஸ்டர் (Lancaster)-இன் பாட்ரிக் பினெட் (Patrick Binnette), மற்றும் நியூமார்கெட்டின் (Newmarket) மாட்டெஜோங் (Moddejonge) என்பவர்கள் தங்களது சொத்துக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு போலி காசோலை அல்லது கிழிக்கப்பட்டக் காசோலை வழங்கி சொத்துகள் திருடப்பட்டுள்ளதென நம்புவோர் பொலிசாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article