வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் இடம்பெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) – இத்தாலியின் ஜாஸ்மின் பலோனி உடன் மோதினார்.
இந்த மோதலில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 1-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பலோனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

