இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் அதிகாரிகள் ஒரே நேரத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த பதவி உயர்வுகள் தேசியபொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவால் உறுதிப்படுத்தப்பட்டு, இந்த வருடம் ஜனவரி 01 முதல் அமுலுக்கு வருகின்றன.
அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜெயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் DIG-களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.