கேரள மாநிலம் கெலிகட்டில் இருந்து இன்று காலை 9.07 மணிக்கு கட்டார் தலைநகர் தோஹா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்தனர் என கூறப்படுகின்றது.
இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தரையிறங்கியது. IX 375 விமானம் காலை 9.07 மணியளவில் கெலிகட்டில் இருந்து புறப்பட்டது, ஆனால் கேபின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 11.12 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது.
“விமானத்தின் கேபின் ஏசியில் சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. அது அவசர தரையிறக்கம் அல்ல,” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மதியம் 1.30 மணிக்கு மாற்று விமானம் மூலம் பயணிகள் கட்டார் அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.