எதிர்வரும் வாரங்களில் லிபரல் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காது மாற்றீடாக fall economic statement ஒன்றையே முன்வைக்கவுள்ளதாக நிதியமைச்சர் பிரான்ஸிஸ் பிலிப் கூறுகிறார். எனினும் நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான காலக்கெடுவையோ அல்லது தாமதத்திற்கான காரணத்தையயோ அவர் விளக்கவில்லை.
வரும் வாரங்களில் பாராளுமன்றம் கூடும்போது லிபரல் கட்சி வாக்குறுதியளித்த வரிக்குறைப்பை அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்வைக்கும் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார்.
குறைந்த வருமான வரம்பிலிருந்து ஒரு புள்ளியைக் குறைப்பதற்காக நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வரிக்குறைப்பை மேற்கொள்வதே புதிய நாடாளுமன்றத்தின் முதற்பணியாகவுள்ளது. இது ஜூலை 1 ஆந் திகதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிக்குறைப்பு தொடர்புடைய வேலைகளை விரைவு படுத்தும் விதமாக பிரதமர் மார்க் கார்னி நிதியமைச்சர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் வரிக்குறைப்பு குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய சிறுபான்மை அரசாங்கம் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.