பிரான்ஸில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) முதல் கடற்கரைகள், பூங்காக்கள், பொதுத் தோட்டங்கள் மற்றும் பேருந்து நிறுத்துமிடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில்,மேலும் நூலகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு வெளியே புகைபிடிப்பதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலில் மின்னணு சிகரெட்டுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனினும் தடையை மீறுபவர்கள் €135 (US$158) 158 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகைப்பிடிக்க கூடாது எனவும் அவர்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டுமெனவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கெத்தரின் வௌட்ரின் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 பேர் புகையிலை தொடர்பான சிக்கல்களால் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
10 பிரெஞ்சு மக்களில் ஆறு பேர் (62 சதவீதம்) பொது இடங்களில் புகைபிடிக்கும் தடையை ஆதரிக்கின்றனர் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.