பீபா கிளப் உலகக்கிண்ண தொடர் எதிர்வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தொடரின் பரிசுத்தொகையாக 1 பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் 32 அணிகள் கலந்து கொள்ளளும் நிலையில் வெற்றிபெறும் அணிக்கான பரிசுத்தொகை மற்றும் மற்றும் யார் யாருக்கு எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. அணிகளின் செயல்திறன் அடிப்படையில், பரிசுத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை லண்டனை தளமாக கொண்ட னுயுணுN நிறுவனம், இதே அளவிலான தொகைக்கு கைப்பற்றியுள்ளது. இதன் 63 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மூலம், 500 மில்லியன் டொலர் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘போட்டியின் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் பங்கேற்கும் கழகங்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள கழக ஒற்றுமை மூலமாகவும் பகிர்ந்தளிக்கப்படும்’ என பீபா தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். மேலும் 2028ஆம் ஆண்டு மகளிர் கிளப் உலகக்கிண்ணம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.