இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘பிளக்மெயில்’.
இந்த படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ஓகஸ்ட் முதலாம் திகதி ரிலீஸ் ஆக இருந்தது. சில காரணங்களால் ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம், செப்.12-ம் திகதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.