பிரேஸில் தேசிய அணியின் அடுத்த பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி என அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் திங்கட்கிழமை (12) அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து அன்சிலோட்டி விலகுவதை அக்கழகம் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு லா லிகா பருவகால இறுதிப் போட்டியைத் தொடர்ந்து மட்ரிட்டை விலகும் அன்சிலோட்டி, பிரேஸிஸை உத்தியோகபூர்வமாக இம்மாதம் 26ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளாரென கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பிரேஸிலின் முதலாவது வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர் அன்சிலோட்டி ஆவார்.
முன்னைய பிரேஸில் பயிற்றுவிப்பாளர்களை விட இரு மடங்காக 197,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை வாரமொன்றுக்கு ஊதியமாகப் பெறவுள்ள அன்சிலோட்டி, அடுத்தாண்டு உலகக் கிண்ணத்தை பிரேஸில் வென்றால் ஐந்து மில்லியன் யூரோக்களைப் பெறவுள்ளார்.