இடதுகால் முட்டியில் ஏற்பட்ட உபாதையால் நிறைய போட்டிகளை தவற விட்ட 33 வயதான நட்சத்திர வீரர் நெய்மார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பிரேசில் அணிக்கு திரும்பியுள்ளார்.
பீபா உலகக்கிண்ண தென்அமெரிக்க கண்ட தகுதி சுற்றில் முன்னாள் சம்பியன் பிரேசில் அணியானது 20ஆம் திகதி கொலம்பியாவையும், 25ஆம் திகதி நடப்பு சம்பியன் அர்ஜென்டினாவையும் சந்திக்கிறது.