பிரான்ஸ் பிரதமராக மீண்டும் ஜெபஸ்டின் லெகோர்னு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் அமைச்சரவையை நியமித்து நாட்டின் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு புதிய பிரதமர் ஜெபஸ்டினிடம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை கலைத்தார். அதனை தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் அந்த நாட்டின் அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக ஒரு வருடத்திற்குள் பிரதமராக நியமிக்கப்பட்ட நான்கு பேர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். ஜெபஸ்டினும் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

