பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது.
9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார்.
வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற முதல் ரேபிட் போட்டி டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற 2-வது ரேபிட் போட்டியில் இனியன், 1.5 – 0.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆக.11-ல் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப்: சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் ஆகஸ்ட் 11 முதல் 13-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம், சேன் அகாடமி பள்ளிகள் குழுமத்துடன் இணைந்து நடத்துகிறது.