19.7 C
Scarborough

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

Must read

பிரபல மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில் இன்று காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சிய கோட்டா சீனிவாச ராவ், 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்தவர்.

அவரது குரல் வளம் மற்றும் உடல் மொழி, கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தை அளித்தன.

பிரணம் கரெடி (1978) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், பத்மஸ்ரீ விருது, ஒன்பது நந்தி விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

சாமி, திருப்பாச்சி, குத்து, சகுனி, கோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவை தவிர, இன்னும் பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் கோட்டா சீனிவாச ராவ் நடித்துள்ளார்.

கோட்டா சீனிவாச ராவ் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில், அவர் காலமானதாக வதந்திகள் பரவின. அப்போது அவர் ஒரு காணொளி வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாகவும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் வயதுமூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு, இந்திய திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும். திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article