14.6 C
Scarborough

பிக் பேஷ் லீக்கில் முதல் தடவையாக ஒப்பந்தமாகிய பாபர் அசாம்!

Must read

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற புகழ்பெற்ற T20 லீக் தொடரான பிக்; பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான வரைவிற்கு முன்ஸ்டீவன் ஸ்மித்சீன் அபாட்மொய்சஸ் ஹென்ரிக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆடுகின்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

இந்த நிலையில்இம்முறை பிக் பேஷ் லீக்கில் சிட்னி அணிக்காக விளையாடுவது தொடர்பில் பாபர் அசாம் கருத்து தெரிவிக்கையில், ‘உலகின் சிறந்த T20 லீக்குகளில் ஒன்றில் விளையாடவும்இத்தகைய வெற்றிகரமான மற்றும் மதிக்கப்படும் அணியின் ஒரு பகுதியாக இருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும்சிட்னி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதையும்ரசிகர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்குவதையும்இந்த அனுபவத்தை பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள்குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் நான் எதிர்நோக்குகிறேன்.’ என அவர் தெரிவித்தார் 

இதேவேளைஅடுத்த வாரம் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் தொடரின் வீரர்களுக்கான வரைவில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான ஷஹீன் அப்ரிடிசதாப் கான்ஹாரிஸ் ரவூப் மற்றும் மொஹமட்  ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

30 வயதான பாபர்அசாம்இதுவரை 320 T20I போட்டிகளில் விளையாடி 11300 ஓட்டங்களைக் குவித்துள்ளார்சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பெஷாவர் ஷல்மி அணியை வழிநடத்தினார்அந்த அணிக்காக 10 இன்னிங்ஸில் 288 ஓட்டங்களை எடுத்து, 128.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அந்த அணி;க்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறினார் 

இருப்பினும்பாபர் அசாம் மோசமான போர்ம் காரணமாக பாகிஸ்தான் T20I அணியில் தனது இடத்தை இழந்துள்ளார்இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article