டொராண்டோவின் லம்ப்டன் பகுதியில் ஒரு பிக்அப் ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டொராண்டோ காவல்துறையினர் இரவு 9:15 மணியளவில் டன்டாஸ் வீதியின் மேற்கு மற்றும் ஸ்கார்லெட் வீதி பகுதியில் இது நடந்ததாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.