கனடாவில் உள்ள பான்ஃப் தேசிய பூங்காவில் உள்ள ‘போ க்ளஸியர்’ நீர்வீழ்ச்சிக்கு அருகே பலரும் மலையேறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற பாறை சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்துக்கு பின்னர் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இடிபாடுகளில் வேறு எவரும் சிக்கவில்லை என கனடா அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தனர்.
சம்பவ இடம்பெற்ற அன்று 70 வயதான பெண் ஒருவர் இறந்து கிடந்ததோடு அதற்கடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை இரண்டாவது உடல் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
மோப்ப நாயின் உதவியுடன் வியாழக்கிழமை பிற்பகல் மற்றுமொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆபத்து காரணமாக, அன்று மாலை இறந்தவரை பாதுகாப்பாக மீட்க முடியவில்லை என்றும் கனடாவின் பார்க்ஸ் தெரிவித்துள்ளது.