7.8 C
Scarborough

பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர்!

Must read

மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் இறு​தி சுற்றுக்கு இந்​திய மகளிர் அணி முன்​னேறி​யுள்​ளது. இதையடுத்து இந்​திய அணிக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன.

இலங்​கை, இந்​தி​யா​வில் நடை​பெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது அரை​யிறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா- ஆஸ்​திரேலியா அணி​கள் விளை​யாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்​டிங் செய்த ஆஸ்​திரேலிய அணி 49.5 ஓவர்​களில் 338 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தது.

339 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய இந்​திய அணி 48.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​டுக்கு 341 ரன்​கள் குவித்து 5 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை போட்​டி​யின் இறு​திப் போட்​டிக்​குள் 3-வது முறை​யாக நுழைந்​துள்​ளது இந்​திய அணி.

இந்​தப் போட்​டி​யின்​போது இந்​திய அணி தரப்​பில் மிகச்​சிறப்​பாக விளை​யாடிய ஜெமிமா ரோட்​ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​நிலை​யில் இறு​திச் சுற்றுக்கு முன்​னேறிய இந்​திய அணி​யினர் பாராட்டு மழை​யில் நனைந்து வரு​கின்​றனர்.

இந்​திய மகளிர் அணிக்கு கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர், இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் விராட் கோலி, பாலிவுட் நடிகர், நடிகைகள் உள்​ளிட்​டோர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக சச்​சின் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் தள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இந்​திய மகளிர் அணி​யினர் அற்​புத​மான வெற்​றியைப் பெற்​றுள்​ளனர். முன்​னணி​யில் இருந்து வழிநடத்​தி​யதற்​காக ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ஹர்​மன்​பிரீத் கவுர் ஆகியோ​ருக்கு வாழ்த்​துக்​கள். சரணி, தீப்தி சர்மா ஆகியோர் ஆட்​டத்தை உயிர்ப்​புடன் வைத்​திருந்​தனர். நமது மூவர்​ணக் கொடியை உயரே பறக்க விடுங்​கள். இவ்​வாறு சச்​சின் தெரி​வித்​துள்​ளார்.

விராட் கோலி வெளி​யிட்​டுள்ள எக்ஸ் தள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஆஸ்​திரேலியா போன்ற வலிமை​யான எதிரணி​யை, எதிர்த்து இந்​திய அணி சிறப்​பான வெற்​றியை பெற்​றுள்​ளது. ஒரு பெரிய ஆட்​டத்​தில் ஜெமிமா ரோட்​ரிக்​ஸின் சிறப்​பான ஆட்​டம், உண்​மை​யான மன உறு​தி, நம்​பிக்கை மற்​றும் ஆர்​வத்​தின் வெளிப்​பாடு. இவ்​வாறு விராட் கோலி தெரி​வித்​துள்​ளார்.

மேலும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்​தா, கரீனா கபூர், ஆலியா பட், ராஷ்மிகா மந்​த​னா, நடிகர்​கள் அனில்​கபூர், மாதவன் உள்​ளிட்​டோரும் இந்​திய மகளிர் அணி​யினருக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​துள்​ளனர்.

HinduTmail

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article