ரிச்மண்ட் ஹில்லில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது 77 வயது முதியவர் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்தார்.
காலை 9 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலை 7க்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை 404 இன் தெற்குப் பாதையில் இந்த சம்பவம் நடந்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அதேநேரம் மற்றுமொரு சாரதியும் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள குறித்த பாதை மூடப்பட்டிருந்ததோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.