12.3 C
Scarborough

பாதாள உலக குற்றவாளிகள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை

Must read

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள கெஹெல்பதர பத்மே, கமாண்டோ சாலிண்டா மற்றும் பாணதுரை நிலங்கா ஆகியோருக்கும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ள பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோருக்கும் 72 மணிநேர தடுப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த ஐந்து குற்றவாளிகள் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மாகாண வடக்கு குற்றப் பிரிவில் விசாரிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்பு உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கை காவல்துறை இந்தோனேசியாவில் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பதர பத்மே, கமாண்டோ சாலிண்டா, பாணதுரை நிலங்கா, பாக்கோ சமன் மற்றும் தம்பாரி லஹிரு ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய மற்றும் இலங்கை காவல்துறை குழு குற்றவாளிகளை நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

து.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article