ஸ்கார்பரோவில் நேற்று இரவு வாகனம் மோதியதில் 40 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிங்ஸ்டன் வீதி மற்றும் லாரன்ஸ் அவென்யூ கிழக்குப் பகுதிக்கு இரவு 10 மணியளவில் பாதசாரி ஒருவர் மீது வாகனம் மோதியதாக வந்த முறைப்பாட்டின் பேரில் அழைக்கப்பட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் “கடுமையான காயங்களுடன்” மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கு காரணமான சாரதி சம்பவ இடத்திலேயே இருந்த நிலையில் விசாரணை தொடர்வதால், அப்பகுதியில் “தாமதங்களை எதிர்பார்க்கலாம்” என்று சாரதிகளுக்கு
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.