13.5 C
Scarborough

பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்துக்கு மீண்டும் தடை விதித்த FIFA

Must read

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்தின் (PFF) அங்கத்துவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது (FIFA)  தடை விதிப்பது இது மூன்றாவது முறையாகும்.

சர்வதேச கால்பந்து அளவுகோல்களின்படி பாகிஸ்தானின் கால்பந்து அரசியலமைப்பை திருத்தத் தவறியதே இந்தத் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் முக்கிய காரணியாக உள்ளது.

ஜூன் 2019 முதல், பாகிஸ்தான் கால்பந்து FIFA ஆல் நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

ஆனால், பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனம் அவர்களின் பரிந்துரைகளின்படி செயல்படத் தவறிவிட்டது.

அதன்படி, (FIFA)  பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் வரை பாகிஸ்தானில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article