17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந் திகதி முதல் 28 -ந் திகதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் , இலங்கை, ஹோங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப்போட்டி செப்.28-ந் திகதி டுபாயில் இடம்பெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரரகளான பாபர் அசாம். முகமது ரிஸ்வானுக்கு இடம் கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் அணியில் தலைவராக சல்மான் அலி ஆகா, மற்றும் அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹூசைன் தலாட், குஷ்தில் ஷா. முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், ஷகிப்சடா பர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷாகின் ஷா அப்ரிடி, சுப்டான் மொஹீம் ஆகியோரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.