நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியிலிருந்து தலைவர் முஹமட் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். புதிய தலைவராக சல்மான் அலி ஆகாவும், உப தலைவராக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரிஸ்வான், பாபர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.