இராகமை மற்றும் பட்டுவத்த இடையேயான ரயில் கடவை அருகே இன்று (19) பகல் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பட்டுவத்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபுகஸ்கந்தவில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த கப் ஸ்கவுட்கள் இந்தக் குழுவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

