தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இல்லையென்றால் தெஹ்ரானை எரித்து விடுவோம் என அந்த நாட்டின் இராணுவ அமைச்சர் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பை உடைத்துக்கொண்டு எளிதாக தெஹ்ரானை அடைந்து வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக ஈரானிய எண்ணெய் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ,ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான டெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது ஐ.டி.எப் விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தமது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.