நெடுஞ்சாலை 401 இல் சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பில், வாகனைச் சேர்ந்த 19 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
எட்டோபிகோக்கில் உள்ள டிக்சன் வீதிக்கு அருகில் அதிகாலை 1:15 மணியளவில் கிழக்கு நோக்கிச் செல்லும் பாதையில் பயணிகள் ஏற்றி சென்ற வாகனம், போக்குவரத்து அமைச்சின் ட்ரக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகபொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பயணிகள் வாகனத்தில் இருந்த இருவர் மற்றும் அமைச்சின் வாகனத்தில் இருந்த ஒருவர் உட்பட மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் வாகனைச் சேர்ந்த 19 வயது இளைஞரை மட்டுமே அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள நிலையில் ஓட்டுநர் மீது, மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நடவடிக்கை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான நடவடிக்கை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கு முன்னர் மற்ற வாகனங்கள் அந்தப் பகுதியில் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருந்த சாரதி அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும், ஆனால் சாட்சிகள் அல்லது டேஷ்கேம் வீடியோ உள்ளவர்கள் உட்பட தகவல் தெரிந்தோர் தொடர்பில் பொலிஸார் இன்னும் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்துள்ளது. ”