இலங்கைக்கு எதிரான பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷ் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலக நஜ்முல் ஹுசைன் சாண்டோ முடிவு செய்துள்ளார்.
பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இனி டெஸ்ட் கேப்டனாக தொடர விரும்பவில்லை என்று கூறினார்.
அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும், தனது முடிவு அணிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
நஜ்முல் ஹுசைன் சாண்டோ 14 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் அணியை வழிநடத்தியுள்ளார். அவர் நவம்பர் 2023 இல் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அணித்தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
அவரது தலைமையின் கீழ், பங்களாதேஷ் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது, இதில் ஓகஸ்ட் 2024 இல் இடம்பெற்ற பாகிஸ்தானில் கிடைத்த தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.