இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் சனிக்கிழமை (26) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கும், நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸுக்குமிடையிலான போட்டியின் இரண்டாவது இனிங்ஸின் ஒரு ஓவருடன் மழை வந்த நிலையில் போட்டியில் முடிவேதும் பெறப்படவில்லை.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், பிரப்சிம்ரன் சிங் 83 (49), பிரியன்ஷ் ஆர்யாவின் 69 (35), அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 25 (16), ஜொஷ் இங்லிஸின் ஆட்டமிழக்காத 11 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 201 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் வைபவ் அரோரா 4-0-34-2, சுனில் நரைன் 4-0-35-0, அன்ட்ரே ரஸல் 3-0-27-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 202 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஏழு ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டிருந்தது.