நோர்த் யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
கீலே வீதி மற்றும் லோரன்ஸ் மேற்கு அவென்யூ அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரவு 7:45 மணியளவில் அவசரகாலக் குழுவினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவசரகால மீட்புப் படையினர் மூலம் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
காயங்களின் அளவு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை இன்னும் வெளியாகவில்லை.