பிக்பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் நீச்சல் குளத்தில் தேனிலவு கொண்டாடும் வீடியோவை சமூகவலை தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காதலித்த அமீர் மற்றும் பாவனி ரெட்டி, இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், தற்போதுஅமீர் – பாவனிதேனிலவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
நீச்சல்குளத்தில் நெருக்கமாக இருப்பது, நீச்சல் குளத்திலேயே சாப்பாடு வரவழைத்து சாப்பிடுவது உள்ளிட்ட காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.
இந்த வீடியோவுக்கு தலைப்பான, “ஒரு குட்டி விடுமுறை! என்னுடைய நெருக்கமானவருடன் வந்திருக்கிறேன். இப்படி ஒரு இனிமையான பிரேக் கண்டிப்பாக இருவருக்கும் தேவைப்படுகிறது,” என்று பாவனி ரெட்டி, பதிவு செய்துள்ளார்.