வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா சுரங்கத்தில் மூன்று தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் டீஸ் லேக் அருகே உள்ள தொலைதூரப் பகுதியில் உள்ள ரெட் கிறிஸ் சுரங்கத்தில் தமது ஒப்பந்த தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் அருகிலுள்ள சுரங்கத் தளங்களிலிருந்து சிறப்புக் குழுக்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நியூமாண்ட் கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று ஒப்பந்ததாரர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டு “நிலச்சரிவு சம்பவங்களுக்கு பின்னர் சிக்கிக்கொண்டனர், இது நிலத்தடி வேலைப் பகுதிக்கான அணுகல் வழி என்று நிறுவனம் கூறுகிறது.
முதல் நிலசரிவில் தொழிலாளர்கள்500 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்ததாகவும், இரண்டாவது சரிவு ஏற்படும் முன்னர், தகவல்தொடர்பு தடைசெய்யப்படுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட அடைக்கல நிலையத்திற்கு இடம்பெயருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் நிறுவனம் கூறுகிறது.
தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, தொழிலாளர்கள் ஒரு அடைக்கல விரிகுடாவில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நிறுவனம் கூறுகிறது.
தகவல்தொடர்புகளை மீட்டெடுப்பதற்கும் தொழிலாளர்களை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதற்கும் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் புதன்கிழமை விபத்தை அறிவித்த பிரீமியர் டேவிட் எபி, மீட்புப் பணிகளுக்கு உதவ சிரேஷ்ட புவி தொழில்நுட்ப ஆய்வாளர் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.