பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நிலையில் , குஷ்தில் ஷா அடித்த பந்தை பிடியெடுக்க முற்பட்ட போது அவரது நெற்றியில் பந்து பலமாகத் தாக்கிய நிலையில் இரத்தக் காயத்துடன் ரச்சின் ரவீந்திரா மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.