நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரராக தாம்சின் நியூட்டன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நியூட்டன் அதில் 56 ஓட்டங்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம் 15 டி20 போட்டிகளில் விளையாடி 22 ஓட்டங்களும் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக கடைசியாக 2021-ம் ஆண்டு விளையாடிய அவருக்கு அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் அவர் தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.