நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் சதம் அடித்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் நீக்கப்பட்டுள்ளார்.அதே நேரத்தில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரை தவறவிட்ட ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

