4.3 C
Scarborough

நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Must read

அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தார்.

5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்) வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவியை ட்ரம்ப் நிறுத்தியதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. நிதியுதவியை நிறுத்தி ஜனாதிபதி பதவியை அதிகாரத்தை ட்ரம்ப் தவறாக பயன்படுத்துவதாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது வெளிநாடுகளுக்கான நிதியுதவியான 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்திவைத்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்திற்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article