கோப் குழுவின் தலைவர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைப்பது நாட்டின் மிக அவசரத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுமதி வரி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வரும் நேரத்தில் இது ஒரு அத்தியாவசியத் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத தீர்வை வரியை அமெரிக்கா விதித்துள்ளது.அதனை குறைக்கும் நோக்கில் இலங்கை-அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.