லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது போட்டி 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ள இந்தப் போட்டியில், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய மூன்று முக்கிய சர்வதேச மைதானங்களில் போட்டிகள் இடம்பெறும்.
LPL 2025 போட்டி, 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான தயார்ப்படுத்தல்களுடன் போட்டியை இணைக்கும் நோக்கம் கொண்டது என்று தொடரின் இயக்குநர் சமந்தா தொடங்வெல குறிப்பிட்டுள்ளார்.