வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக அதிரடியான எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ மைசா ‘ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி கிளர்வோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் ‘மைசா ‘ எனும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
ஸ்ரேயாஸ் பி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார். எக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன் ஃபார்முலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தானா கையில் துப்பாக்கி ஏந்தி அதிரடியான எக்சன் அவதாரத்தில் தோன்றுவதால் ரசிகர்களின் பாரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

