சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ‘தேவர்மகன்’ திரைப்படம் 1992ல் திரைக்கு வந்தது.
நாசர் ரேவதி கௌதமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.
பரதன் இயக்கத்தில் கமலின் திரைக்கதையில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் கமலின் தந்தையாக சிவாஜி கணேசன் நடித்ததோடு நாசர் வில்லனாக நடித்திருந்தார். இளையராஜாவின் இசையில் அந்த படத்தில் வந்த பாடல்களும் ஹிட் ஆகின.
நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் வடிவேலுவுக்கு இந்த படத்தில் குணசித்திர வேடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த படம் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் திகதி வெளியானது இன்றோடு படம் வெளியாகி 33 வருடங்களாகியுள்ளன.
‘ இந்த நிலையில் என் குழந்தைக்கு 33 வயதாகிறது இப்போது வரை அதை உயிரோடும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு நன்றி’ என கமல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

