6.6 C
Scarborough

தெற்காசிய ஜூனியர் கால்பந்து; 7 வது முறையும் சம்பியன் ஆனது இந்தியா

Must read

10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சம்பியன்ஷிப் (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இடம்பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷை தோற்கடித்து 7-வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article