தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
நாளை நடைபெற உள்ள போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முயற்சி செய்யும். அதேவேளையில் ஆறுதல் வெற்றிக்காக அவுஸ்திரேலியா போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை நேரப்படி இந்த போட்டி நாளை காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.