இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேமுதல் போட்டியாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து டி20 தொடர் 10-ம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன பென் டக்கட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நட்சத்திர சகல துறை ஆட்டக்காரரான சாம் கர்ரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டி20 அணியின் தலைவராக ஹாரி புரூக் இருப்பதோடு ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பான்டன். ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், சாம் கர்ரண், வில் ஜாக்ஸ், சாகிப் மக்மூத், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், லூக் வுட் ஆகியோர் போட்டியாளர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.